நீர்வரத்து வினாடிக்கு 70 ஆயிரம் கன அடி
அருவியல் குளிக்க தொடர்ந்து 10-வது நாள் தடை நீடிக்கிறது
கர்நாடகா அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கர்நாடக மற்றும் கேரள மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து இருக்கிறது. இதன் காரணமாக காவிரி
நீர் பிடிப்பு பகுதிகளான குடகு, வயநாடு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்த நிலையில். கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி , நுகு அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
கபினி அணை தனது முழு கொள்ளளவை எட்டி உள்ளது .மற்ற அனைகளும்
வேகமாக நிரம்பி வருகின்றன.
கிருஷ்ணராஜா சாகர் இரு அணைகளில் நேற்று காலை 86 ஆயிரம் 790 கன அடியும் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கர்நாடக அரசு ஒரு 1.00.000 கன அடி முதல் 1.50.000 லட்சம் கனஅடி வரை திறந்து இருப்பதாக அறிவித்துள்ளது இதனால் ஒகேனக்கல்லில் நேற்று காலை வினாடிக்கு 42 ஆயிரம் கன அடியும் மாலை 56 ஆயிரம் கண்ணாடியும் தண்ணீர் வந்தது.
இந்த வரத்து படிப்படியாக உயர்ந்து இன்று 70 ஆயிரம் கன அடியாக நீர் வருகிறது இந்த நீர்வரத்து இன்று மாலைக்குள் மேலும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது
நீர்வரத்தால் மெயின் அருவி, ஐந்தருவி, சினிப்பால்ஸ் மற்றும் காவிரி ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.
சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும் பரிசல் பயணம் செய்யவும் விதிக்கப்பட்ட தடையானது 10-வது நாள் தொடர்ந்து நீடிக்கிறது.
ஒகேனக்கலுக்கு நாடார் கொட்டாய், ஊட்டமலை ,சத்திரம், மற்றும் நெருப்பூர் உள்ளிட்ட காவிரி கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடப்பட்டது.மேலும் போலீசார், ஊர்க்காவல் படையினர் காவிரி கரையோர பகுதிகளில் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.
காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை கர்நாடகா தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Previous Articleபைக்கில் ரீல்ஸ் வெளியிட்ட ஜோடிக்கு போலீசார் 13,000 அபராதம்
Keep Reading
Add A Comment