ஈரோடு அருகே புங்கம்பாடி பகுதியை சேர்ந்தவர் பரத்.,டிரைவரான இவர் சொந்தமாக சுற்றுலா வாகனம் வைத்து தொழில் செய்து வருகிறார்.இந்நிலையில் மூலப்பாளையத்தில் இருந்து சேலம் வரை சுப நிகழ்ச்சிக்காக வாடிக்கையாளரை அழைத்து செல்ல வீட்டில் இருந்து வாகனத்தை எடுத்து கொண்டு பெருந்துறை சாலை வழியாக ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது வேப்பம்பாளையம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது வாகனத்தின் முன் பகுதியில் இருந்து தீடிரென கரும்புகை வருவதை பார்த்த ஓட்டுநர் பரத் வாகனத்தை சாலையோரம் நிறுத்தி கரும்புகை அணைக்க அருகில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் இருந்து தீயணைப்பு கருவியை கொண்டு முயற்சி செய்தார்.
இருப்பினும் கரும்புகையுடன் தீ வாகனத்தின் முன்பகுதி உட்பட வாகனம் முழுவதும் பரவி எரியத் தொடங்கியது.இதையடுத்து வாகனத்தின் உரிமையாளர் பரத் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஈரோடு தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர்.
இதற்கிடையே சம்பவ இடத்திற்கு வந்த தாலுக்கா போலீசார் தீ விபத்து காரணமாக ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பை சரி செய்தனர். மேலும் தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.வாகனத்தின் முன்பகுதியில் உள்ள பேட்டரியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து நிகழ்ந்திருக்க கூடும் தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.
10லட்சம் ரூபாய் மதிப்பிலான சுற்றுலா வாகனம் உரிமையாளர் கண் முன்பே எரிந்தது.குடும்பத்தின் வாழ்வாதார நம்பிக்கையாக இருந்த வாகனம் எரிந்து சேதமடைந்ததை பார்த்து கதறிய குடும்பத்தினரின் செயல் காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது.இந்த தீ விபத்து குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது..
10லட்சம் ரூபாய் மதிப்பிலான சுற்றுலா வாகனம் உரிமையாளர் கண் முன்பே எரிந்து விபத்து
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Previous Articleநடிகர் விஜய் ஆண்டனியை விமர்சித்த டாக்டர்
Keep Reading
Add A Comment