பிரசாந்தின் அந்தகன் திரைப்படத்தின் முதல் தீம் பாடலை விஜய் வெளியிட்டுள்ளார்.
ஆயுஷ்மன் குரானா, தபு, ராதிகா ஆப்தே நடிப்பில் உருவான அந்தாதுன் திரைப்படம் ஹிந்தியில் 2018 அக்டோபர் மாதம் வெளியாகி, ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்தது. இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் பெற்றிருந்தார்.
பொன்மகள் வந்தாள் படத்தை இயக்கிய ஜேஜே பிரட்ரிக், முதலில் அந்தாதுன் தமிழ் ரீமேக்கை இயக்குவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், அவர் விலக, தியாகராஜனே இப்படத்தை இயக்கினார்.
அந்தகன் எனப் பெயரிடப்பட்ட இப்படத்தில் பிரசாந்த், சிம்ரன், ப்ரியா ஆனந்த், கார்த்திக், சமுத்திரக்கனி, யோகி பாபு, ஊர்வசி, கே.எஸ். ரவிகுமார், வனிதா விஜயகுமார் போன்றோர் நடித்துள்ளனர்.
இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி வெளியாகுமென படக்குழு தெரிவித்த நிலையில் இதன் டிரைலர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த நிலையில், அந்தகன் திரைப்படத்தின் முதல் பாடலை நடிகர் விஜய் வெளியிட்டுள்ளார். அந்தகன் ஆந்தெம் (anthagan anthem) என்கிற இப்பாடலை உமாதேவி, ஏகாதேசி எழுத இசையமைப்பாளர் அனிருத் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி பாடியுள்ளது குறுப்பிடத்தக்கது.
“அந்தகன் பட தீம் பாடலை வெளியிட்ட விஜய்
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Previous Articleநேபாள விமானம் விபத்து… 18 பேர் உயிரிழப்பு
Next Article நடிகர் விஜய் ஆண்டனியை விமர்சித்த டாக்டர்
Keep Reading
Add A Comment