தமிழகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் தனுஷ் சொந்தமாக இயக்கி நடித்து வெளியாக இருக்கும் ஐம்பதாவது படமாகிய ராயன் படம் வெற்றியடைவதற்காக அவரது சொந்த ஊரான மல்லிங்காபுரம் செல்லும் வழியில் சங்கராபுரம் அருகே அமைந்துள்ள 200 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற சங்கராபுரம் கருப்பசாமி கோவிலில் தனது குடும்பத்தாருடன் சிறப்பு வழிபாடு செய்தார்
தனுஷ் மற்றும் அவரது இரு மகன்கள், இயக்குனரும் நடிகருமான செல்வராகவன் மற்றும் குடும்பத்தினருடன் சேர்ந்து வந்து சாமி தரிசனம் செய்து வழிபட்டார்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் இருந்து சுமார் 16 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சங்கராபுரம் கிராமம்.
இங்கு சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கருப்பசாமி கோவில் அமைந்துள்ளது.
பிரசித்தி பெற்ற இந்த திருக்கோவிலில் பல்வேறு சினிமா படப்பிடிப்புகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இன்று இந்த கோவிலில் தமிழக முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் தனது 50 ஆவது படமான ராயன் படத்தில் தானே இயக்கி நடித்து வந்த நிலையில் வரும் 26 ஆம் தேதி படம் வெளியாக உள்ளது.
படம் வெற்றி அடைவதற்காக நடிகர் தனுஷ் தனது குடும்பத்தினருடன் போடிநாயக்கனூர் சங்கராபுரம் கருப்பசாமி கோவிலில் சிறப்பு வழிபாடுசெய்தனர்.
அவருடன் அவரது இரு மகன்கள்யாத்ரா, லிங்கா , தனுஷின் சகோதரரான இயக்குனர் மற்றும் நடிகருமான செல்வராகவன் மற்றும்அவரது தந்தை கஸ்தூரி ராஜா குடும்பத்தினர் அனைவரும் வருகை தந்து சுவாமி வழிபாடு செய்தனர்.
குலதெய்வ கோயிலில் நடிகர் தனுஷ் குடும்பத்தாருடன் சிறப்பு வழிபாடு
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Next Article நேபாள விமானம் விபத்து… 18 பேர் உயிரிழப்பு
Keep Reading
Add A Comment