நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து ஒரு விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்திற்குள்ளானது. இதில் 18 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நமது அண்டை நாடான நேபாளத்தின் தலைநகரன காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் விமான நிலையத்தில் இருந்து, பிரபல சுற்றுலாத்தளமான போகராவுக்கு புறப்பட்ட விமானத்தில் 19 நபர்கள் இருந்ததாக தகவல்வெளியாகிறது.
பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள எடுத்துச் செல்லப்பட்ட விமானத்தில் சர்வுர்யா ஏர்லைன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த 17 பேர் மற்றும் 2 விமானிகள் இருந்தனர்.
இந்த நிலையில் நேபாளத்தின் காத்மாண்டு விமான நிலையத்தில் இருந்து 19 பேருடன் புறப்பட்ட விமானம் சில வி நாடிகளில் ஓடு பாதையில் விழுந்து நொறுங்கியது.
விமானம் தீப்பற்றி எரிய அதிலிருந்த 18 பேரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகிறது.
விபத்தில் சிக்கிய விமானத்தின் விமானி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
விபத்திற்குள்ளான இந்த விமானம் செளர்யா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமானது. அங்கு விபத்து ஏற்பட்டவுடன் விமானத்தின் தீப் பிடித்து எரிந்துள்ளது.
இதையடுத்து விமான நிலையத்தில் இருந்த தீயணைப்பு படை வீரர்கள் அணைத்துள்ளனர். தொடர்ந்து காவலர்களும், தீயணைப்புப்படையினரும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நேபாள விமானம் விபத்து… 18 பேர் உயிரிழப்பு
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Previous Articleகுலதெய்வ கோயிலில் நடிகர் தனுஷ் குடும்பத்தாருடன் சிறப்பு வழிபாடு
Next Article “அந்தகன் பட தீம் பாடலை வெளியிட்ட விஜய்
Keep Reading
Add A Comment