வங்கதேசத்தில் கல்வி, அரசு வேலைக்கான இட ஒதுக்கீடு 7 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 93 % சதவீதம் தகுதியின் அடிப்படையில் நிரப்பப்படும் என்று அந்த நாட்டின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நமது அண்டை நாடு வங்கதேசம். இந்த நாடு கடந்த 1971 ஆம் ஆண்டு உருவானது. அப்போது, பாகிஸ்தான் ரணுவத்திற்கு எதிரான போரில் உயர்த்தியாகம் செய்த குடும்பத்தினருக்கு 30% இடஒதுக்கீடு செய்யப்பட்டது.
அங்குள்ள பின் தங்கிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு 40% சதவீதமும், பெண்களுக்கு 10 சதவீதமும் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. எனவே மொத்தமாக 80% இட ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனால் பொதுப்பிரிவினருக்கு 20% இட ஒதுக்கீடு மட்டுமே கிடைத்து வந்தது.
அதன்பின்னர்., கடந்த 1976 ஆம் ஆண்டு பின் தங்கிய மாவட்டங்களுக்கான இட ஒதுக்கீடு 40 சதவீதத்தில் இருந்து 20% சதவீதமாக குறைக்கப்பட்டது. இதனால் பொதுப்பிரிவினருக்கான இட ஒதுக்கீடு 40 சதவீதமாக அதிகரித்தது.
இதையடுத்து, கடந்த 1985ஆம் ஆண்டு பின் தங்கிய மாவட்டங்களுக்கான ஒட ஒதுக்கீடு மேலும் 10 சதவீதம் குறைக்கப்பட்டது. சிறுபான்மையினருக்கு புதிதாக 5சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதன்பிறகு பொதுப்பிரிவினருக்கான இட ஒதுக்கீடு 45சதவீதமாக அதிகரித்தது.
இந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு வங்கதேச அரசு ஒட்டுமொத்த இட ஒதுக்கீட்டையும் ரத்து செய்தது. இதுகுறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், கடந்த ஜூன் 5 ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது.
அதில், ‘’ஏற்கனவே நடைமுறையில் இருந்த படி சுதந்திர போராட்ட தியாரிகளின் வாரிசுகள், பின் தங்கிய மாவட்ட மக்கள்,மகளிர் மற்றும் சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீடு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
இதை எதிர்த்து, டாக்கா மற்றும் சிட்டாங் பல்கலைக் கழகங்களின் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இது நாடு முழுவதும் கலவரமாக வெடித்தது.
இதில் 151 பேர் உயிரிழந்தனர். 2,500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 60 வாகனங்கள் தீக்கு இரையாகின. இந்த நிலையில் உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக வங்கதேச அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இவ்வழக்கு வரும் ஆகஸ்ட் மாதம் விசாரணைக்கு வரவிருந்த நிலையில், நாட்டில் கலவரம் வெடித்து உயிர்பலி அதிகரித்துள்ளதால் இவ்வழக்கை உச்ச நீதிமன்றம் முன்கூட்டியே விசாரணை செய்தது.
இந்த விசாரணையின்போது, கல்வி, வேலைவாய்ப்புக்கான இட ஒதுக்கீட்டை 7 சதவீதமாக குறைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சுதந்திர போராட்ட தியாகிகளின் இட ஒதுக்கீடு 30 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. திருநங்கைகள் , மாற்றுத்திறனாளிகளுக்கு 2% இட ஒதுக்கீடு வழங்கப்படும் எனவும், மீதமுள்ள 93% தகுதியின் அடிப்படையில்தான் நிரப்பப்படும் என்று உச்ச நீதிமன்றம் இத்தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் டாக்கா,சிட்டாங் பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. த்ற்போது அந்த நாட்டில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் பணி ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், கலவரம் மீண்டும் நடக்காமல் இருக்க, நாடு முழுவதும் ஊரக்டங்கு உத்தரவு அமலில் உள்ளது.
மேலும், அங்கு கலவரத்தில் ஈடுபடுவோரை கண்டதும் சுட உத்தரவிட்டுஅப்பட்டுள்ளது. இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்ப், ராணுவ நடவடிக்கையால் இன்னும் சில தினங்கள்ல் வங்கதேசம் இயல்பு நிலைக்கு திரும்பும் என்று தெரிகிறது.
SinojKiyan
வங்கதேசத்தில் இட ஒதுக்கீடு சதவீதம் குறைப்பு….கலவரம் ஓய்ந்ததா?? சினோஜ்-ன் சிறப்புக் கட்டுரை
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Next Article கோட்டை மாரியம்மன் திருக்கோவிலில் ஆடித்திருவிழா
Keep Reading
Add A Comment