ஆலங்குடி அருகே 21 வயது பெண்மணி ஒருவர் மாற்று சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞரை காதலித்த அந்த இளைஞரை கூட்டிச் சென்ற நிலையில் சம்பந்தப்பட்ட பெண்மணியின் பெற்றோர் பெண்ணை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்து நான்கு தினங்களை கடந்தும் பெண்ணை கண்டுபிடித்து தரவில்லை என்று குற்றம் சாட்டி ஆலங்குடி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டதோடு காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கல்லாலங்குடியில் உள்ள முத்துராஜா குடியிருப்பைச் சேர்ந்த 21 வயது பெண்மணி கார்த்திகா.
இவர் அந்த பகுதியைச் சேர்ந்த மாற்று சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்த நிலையில் அவரை கடந்த 16ம் தேதி கூட்டிச்சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இதுகுறித்து கார்த்திகாவின் பெற்றோர் கடந்த 19ம் தேதி அன்று ஆலங்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த புகார் தொடர்பாக ஆலங்குடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் புகார் கொடுத்து வழக்கு பதிவு செய்து நான்கு நாட்களைக் கடந்தும் இதுவரை சம்பந்தப்பட்ட பெண்ணை கண்டுபிடித்து தராததால் பெண்ணின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆலங்குடி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் ஆலங்குடி துணை காவல் கண்காணிப்பாளர் பேச்சுவார்த்தை நடத்தி நாளைக்குள் சம்பந்தப்பட்ட பெண்ணை கண்டுபிடித்து தருவதாக உத்தரவாதம் கொடுத்ததோடு உடனடியாக ஐந்து பேர் கொண்ட காவல் துறையினர் குழுவை அனுப்பி சம்பந்தப்பட்ட பெண்ணை தேட நடவடிக்கை எடுத்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
மாற்று சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞரை காதலித்த பெண்ணை காணவில்லை என புகார்
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Previous Articleகோட்டை மாரியம்மன் திருக்கோவிலில் ஆடித்திருவிழா
Keep Reading
Add A Comment