பழனியில் சாலையில் சென்று கொண்டிருந்த கல்லூரி மாணவியை, தெரு நாய்கள் சூழ்ந்து கடித்ததில் கல்லூரி மாணவி பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கலிக்கநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ஹேமா இவர் ஒட்டன்சத்திரம் அருகே பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார்.
இந்நிலையில் கல்லூரிக்கு செல்வதற்காக பழனி தீயணைப்பு நிலையம் அருகே சாலை ஓரத்தில் நடந்து வந்து கொண்டிருந்தபோது அங்கு திரிந்து கொண்டிருந்த தெரு நாய்கள் சூழ்ந்து ஹேமாவை கடித்து குதறியதில் மாணவி கூச்சலிட்டதை பார்த்த எதிரே இருந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக மாணவியை காப்பாற்றி பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
கல்லூரிக்காக சென்ற மாணவியை தெருநாய்கள் சூழ்ந்து கடித்துக் குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெருநாய்களை கட்டுப்படுத்திட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
கல்லூரி மாணவியை கடித்த தெரு நாய்கள்
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Keep Reading
Add A Comment