தனது பிறந்தநாள் அன்று திருச்செந்தூரில் சுவாமி தரிசனம் செய்தார் நடிகர் யோகிபாபு.
திரைப்பட காமெடி நடிகர் யோகி பாபு தனது பிறந்தநாளை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
பக்தர்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள், திரைப்பிரபலங்களும் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று தமிழ் திரையுலகில் காமெடிக்கு என்று தனி முத்திரை பதித்து வரும் நடிகர் யோகிபாபு தனது பிறந்தநாளை முன்னிட்டு குடும்பத்துடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்தார்.
அவர்கள் மூலவர், சண்முகர், வள்ளி தெய்வானை, தட்சிணாமூர்த்தி மற்றும் சத்ரூ சம்ஹார மூர்த்தி ஆகியோரை வணங்கினர்.
கோவிலில் தரிசனம் முடித்து விட்டு கோவில் தூய்மை பணியாளர்களை அருகில் அழைத்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட யோகிபாபு வெளியே வந்து, பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் உடன் நின்று புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தார்.
கோவிலுக்கு வெளியே வந்து பேட்டரி காரில் சென்ற அவர் அந்த வழியாக சென்ற கோவில் தூய்மை பணியாளர்களை பார்த்ததும், பேட்டரி காரை நிறுத்த சொல்லி தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் பணம் வழங்கினார். அதன் பின்னர் அங்கிருந்து கிளம்பினார்.
திருச்செந்தூரில் சுவாமி தரிசனம் செய்த நடிகர் யோகிபாபு
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Keep Reading
Add A Comment