ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து அனந்தபுரம் சென்ற தனியார் பேருந்து பிரகாசம் மாவட்டம் மார்க்கபுரம் மண்டலம் திப்பையபாளையம் அருகே சென்று கொண்டிருந்தபோது சாலையின் குறுக்கே எருமை கூட்டம் ஒன்று வந்தது.
திடீரென எருமைகள் சாலையின் குறுக்கே வந்ததால் பேருந்து அவற்றின் மீது மோதுவதை தவிர்க்க முயன்று பேருந்து திருப்பினார் ஓட்டுனர்.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து திடீரென்று சாலையின் குறுக்கே கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
விபத்தில் பேருந்தில் பயணித்த இரண்டு பயணிகள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக மரணமடைந்த நிலையில் மேலும் சிலர் காயம் அடைந்தனர்.
தகவல் அறிந்து அங்கு வந்து சேர்ந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
சாலையின் குறுக்கே வந்த எருமை கூட்டம்… பேருந்து கவிழ்ந்து இரண்டு பேர் மரணம்.
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Previous Articleகல்லூரி மாணவியை கடித்த தெரு நாய்கள்
Keep Reading
Add A Comment