இலக்குகளை நோக்கிய பயணம்
நமக்கான பாதைகளை நாம் வகுத்துக் கொள்ளாதவரை ஒரு நாளும் இலக்குகளை நோக்கிச் செல்ல முடியாது. வாழ்வின் பாதையில் ஆயிரம் மனிதர்களைச் சந்திக்கிறோம். அதில் வெற்றியை ருசித்தவர்களும் உண்டு. தோல்வியை அனுபவித்தவர்களும்.
கால்கள் செல்லும் பாதையில் எல்லாம் சென்றால் போகும் இடத்தை அடைய முடியாது. ஆனால் போய்ச் சேர வேண்டிய இடத்திற்குச் சரியாகத் திட்டமிட்டு நோக்கத்தோடு சென்றால் குறிப்பிட்ட இடத்தை உரிய நேரத்தில் அடையலாம்.
வாழ்க்கை எளிதானது என்றால் எளிதானது. கடினமானது என்றால் கடினமானது. ஆனால் வெற்றியும், இலக்குகளை அடைவதும் ஒன்றும் அவ்வளது சுலபமானது அல்ல.
அது எந்தத் துறையாகவே இருந்தாலும் அதில் நாம் எவ்வளவு உழைக்கிறோம். எத்தனை தூரம் பயணிக்கிறோம். திறமைகளை வளர்த்துக் கொள்கிறோம் என்பதைப் பொறுத்துத்தான் அது நமக்குக் கைகூடும்.
எதையுமே சுலபமாக அணுகுவது என்பது இன்றைய தலைமுறைக்கு பழக்கப்பட்டுவிட்டது. கேட்டது உடனடியாகக் கிடைக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் சாப்பிட மாட்டேன். உயிரை மாய்த்துக்கொள்வது போன்ற சம்பவங்களும் நிகழ்காலத்தில் நடந்துகொண்டிருக்கின்றன.
இதற்கெல்லாம் முந்தைய தலைமுறைகளைப் போல் ஒரு வேலையை எப்படி நிதானத்துடன் செய்ய வேண்டும். ஒருபொருளை அடைவதற்கு எப்படி பொறுமையுடன் இருக்க வேண்டும். அதை வாங்குவதற்கான பொருளாதார நிலை, அது நமக்குத் தேவையா என்பதையெல்லாம் பகுத்துணர்ந்து, பெற்றோரிடம் வரவு செலவு பொருளாதார நிலையை தெரிந்து,புரிந்து நடந்து கொண்டார்கள் என்பதை அறிவோம்.
ஆனால் இன்று அதற்கு நேர்மாறாக நடப்பதைக் கண்டுகொண்டு பார்த்தாலும் அதிலிருந்து இன்றைய தலைமுறை பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். அதுதான் பக்குவப்பட்ட வாழ்க்கைக்கு மட்டுமல்ல, வாழ்க்கையை நேர்மறைக் கண்ணோட்டத்தில் பார்ப்பதற்கும், எதிர்மறை நிகழ்வுகள் நடந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளுகிற மனோபாவத்திற்கும் நம்மை உந்துவதற்கும் உதவும்.
காற்றில் அலைப்பாயும் பஞ்சு அது இலக்கின்றிச் செல்கிறது. ஆனால் இரு மருங்கிலும் உள்ள கரையை உரசிக் கொண்டு செல்லுகின்ற ஆறானது பெருங்கடலை நோக்கிச் செல்கிறது. ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டால் அது கரைகளை உடைத்து, மதகுகளை தாண்டி, ஊருக்குள் வந்து உயிரிழப்புகளை ஏற்படுத்துகிறது.
இதிலிருந்து எனன் தெரிகிறது. இலக்குகள் இருந்தால் அது பயணத்தை இலகுவாக்கும். இல்லையென்றால் அந்த இலக்குகளே நம்மை இலக்காரமாக பார்க்கும்.
காற்றில் அலையும் பஞ்சுக்கு யார் கடிவாளம் போடுவது? அதைப் போட முடியுமா? அதனால் யாருக்கு என்ன முடியும் என்பதை முதலில் உணர வேண்டும்! ஆறு அமைதியாக இருக்கும்போது, அது கரைகளை முத்தமிட்டுச் செல்லும். இது நிதானமத்திற்கு ஒப்பாகும். அதுவே புயலால் வெள்ளம் சூழ்ந்து காட்டாறாக உருவெடுத்தால் அது பேரழிவை ஏற்படும். இது பொறுமைக் குணமின்றி ஒருவேலையைச் செய்யும்போது ஏற்படும் விபரீதத்தை நமக்கு உணர்த்துகிறது.
அதனால் எந்தவொரு தருணத்தையும் சூதனமாக தகவமைத்துக் கொண்டு, நிகழ்காலத்தில் வாழ்ந்து, எதிர்காலத்தைப் புரிந்து கொள்ள தலைப்பட்டு, இறந்தகாலத்தில் இருந்து ஏதேனும் கற்றுக்கொள்ள முற்பட்டால் அது வாழ்க்கப்பாடமாக நமக்கு அமையும்.
பூக்கள் வாசம் கொடுக்கும்! மழை பூமிக்கு விளைச்சல் கொடுக்கும்! மனிதன் ஆற்றலைக் கொடுப்பான்…. நாம் ஆற்றலின் புகழிடம் என்பதை உணர்வோம். இலக்குகளை நோக்கி பயணித்து ஜெயிப்போம்.
சினோஜ்கியான்
இலக்குகளை நோக்கிய பயணம்-சினோஜ் கட்டுரைகள்
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Keep Reading
Add A Comment