பொன்னமராவதி அருகே கண்மாக்கரையில் மூன்று பவுன் நகைக்காக கொலை செய்யப்பட்ட மூதாட்டி-மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர விசாரணை-இது குறித்து பொன்னமராவதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கீழப்பட்டி கீழக்கண்மாயில் மூதாட்டி ஒருவர் முகம் மற்றும் கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் கொலைசெய்யப்பட்ட நிலையில் இறந்து கிடப்பதாக பொன்னமராவதி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொன்னமராவதி போலீசார் இதுகுறித்து விசாரணை செய்ததில் இறந்தவர் பெயர் சேது அம்மாள் வயது 80 என்பதும் அவர் வேப்பம்முத்துகளை சேகரித்து அதனை விற்பனை செய்து வந்ததும், வேப்பம் முத்துகளை சேகரிப்பதற்காக அவர் கீழகண்மாய்க்கு வந்ததும் இறந்த சேது அம்மாளின் உடலில்அவர் அணிந்திருந்த நகைகளை காணவில்லை என்பதும் தெரியவந்தது.
எனவே சேதுஅம்மாள் அணிந்திருந்த மூன்று பவுன் நகைக்காக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
தொடர்ந்து புதுக்கோட்டையில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. சம்பவ இடத்திலிருந்து மோப்பம் பிடித்த மோப்பநாய் யாரையும் கவி பிடிக்காமல் சிறிது நேரம் ஓடி நின்றது.
இறந்த சேது அம்மாளின் பிரேதத்தை உடற்கூறாய்வுக்காக புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இது குறித்து பொன்னமராவதி போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை செய்த குற்றவாளியை தேடி வருகின்றனர்.
கண்மாய்கரையில் மூதாட்டி நகைக்காக கொலை செய்யப்பட்ட சம்பவம் பொன்னமராவதி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மூன்று பவுன் நகைக்காக கொலை செய்யப்பட்ட மூதாட்டி-போலீசார் தீவிர விசாரணை
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Previous Articleகல்யாண பசுபதிசுவரர் ஆலயத்தில் 63 நாயன்மார்களின் திருவீதி உலா
Keep Reading
Add A Comment