கரூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கருக்கு வருகின்ற 31-ம் தேதி வரை நீதிமன்ற காவல்.
சொத்து மோசடி வழக்கில் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது பிரகாஷ் அளித்த புகாரின் பேரில் கொலை மிரட்டல், ஆழ் கடத்தல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் ஏற்கனவே பதியப்பட்ட வழக்கில் கரூர் மாவட்டம், வாங்கல் காவல் நிலைய போலீசார் நேற்று அவரை கைது செய்தனர்.
ஏற்கனவே சிபிசிஐடி போலீசார் மூலம் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட எம்.ஆர்.விஜயபாஸ்கர் 15 நாள் நீதிமன்ற காவலில் உள்ளார்.
இந்த நிலையில் வாங்கல் காவல் நிலைய வழக்கில் கைது செய்யப்பட்டு இன்று கரூர் விரைவு நீதிமன்ற நீதிபதி மகேஷ் முன்பு ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு வருகின்ற 31-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீண்டும் திருச்சி மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.
ஏற்கனவே முதல் வழக்கில் கைது செய்யப்பட்ட விஜயபாஸ்கருக்கு வருகின்ற ஜூலை 31ஆம் தேதி வரை நீதிமன்ற தகவல் வைக்குமாறு உத்தரவிட்டதை எடுத்து இரண்டாவது வழக்கிலும் ஜூலை 31 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி மகேஷ் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
எம்.ஆர் விஜயபாஸ்கருக்கு வருகின்ற 31-ம் தேதி வரை நீதிமன்ற காவல்
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Previous Articleகார் பார்க்கிங் அருகே கிடந்த 15 அடி நீள மலைப்பாம்பு
Keep Reading
Add A Comment