இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்தில் உலகம் முழுக்க ரிலீஸான படம் இந்தியன் -2. இப்படத்தில் கமலுடன் இணைந்து சித்தார்த், பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருந்தார். ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவணகுமார் வசனம் எழுதியிருந்தனர்.
இப்படத்தை லைகா பிரமாண்ட தயாரித்த நிலையில் நேற்று இந்தியன் 2 படம் ரிலீஸானது. இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனம் பெற்று வருகிறது.
இந்த நிலையில் இப்படத்திற்கு தொடர்ந்து மீம்ஸ்களாகவும், யூடியூப்பிலும் விமர்சனங்கள் குவிந்து வரும் நிலையில், விமர்சனம் செய்பவர்களைப் பற்றி இப்படத்தில் நடித்த பாபி சிம்ஹா பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
’’எல்லோரும் தங்களை அறிவாளிகளாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், ஒரு விஷயம் நல்லா இருக்கு என சொன்னா நம்மை முட்டாள் என நினைத்து விடுவார்களோ … எண்ணியபடி சும்மா சாக்கு சொல்லும் வகையில் ஏதோ ஒன்றை பேசு வருகிறார்கள். அந்த அறிவாளிகளைப் பற்றியெல்லாம் கவலைப்பட தேவையில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.
இந்தியன் -2 எழும் எதிர்மறையான விமர்சனங்கள் பற்றி நடிகர் பாபி சிம்ஹா கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியன் -2 எழும் எதிர்மறையான விமர்சனங்கள் பற்றி நடிகர் பாபி சிம்ஹா கருத்து
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Previous Articleவள்ளியம்மா பேராண்டி: இசையமைப்பாளராக அவதாரம் எடுத்த அறிவு
Keep Reading
Add A Comment