சவுக்கு சங்கரின் நடத்தை மன்னிக்க முடியாதது தான் எனினும் அவருக்கு ஏன் இடைக்கால நிவாரணம் வழங்கக்கூடாது என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் சமீபத்தில் அளித்த பேட்டியில், தமிழக பெண் போலீஸார் பற்றி தரக்குறைவான கருத்துகளை கூறி அதற்காக கைது செய்யப்பட்டார். அதன்பின் அவர் கஞ்ச வைத்திருப்பதாக வழக்கு தொடரப்பட்டது.
கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, குண்டர் சட்டம் பாய்ந்தது. இதை எதிர்த்து சவுக்கு சங்கரின் தயார் கமலா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் மாறுபட்ட உத்தரவுகள் பிறப்பித்தனர். இதையடுத்து, சவுக்கு சங்கரின் தயார் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சுதன்ஷூ துலியா, அமானுல்லா அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழ்நாடு அரசின் ஊழல்களை வெளிக்கொண்டு வந்ததனால் சவுங்கு சங்கர்கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கைது நடவடிக்கை அரசியலமைப்பு சட்டம் பிரிவு 19-1ஏ, 21 மற்றும் 22-ன் கீழ்பேச்சுரிமையை மீறும் செயல் என்று அம்மனுவில் குறிப்பிட்டிருந்தது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இவ்விவகாரத்தில் அரசு தரப்பு கடுமை காட்டக்கூடாது. ஒருவரை தடுப்பு காவலில் வைப்பது மிக தீவிரமான விசயம். சவுங்கு சங்கரால் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் உள்ளதா?
அவரது நடத்தை மன்னிக்க முடியாதது தான்… ஆனாலும் அவருக்கு ஏன் அரசு இடைக்கால நிவாரணம் வழங்கக் கூடாது என்று கேள்வி எழுப்பினர்.
மேலும் சவுக்கு சங்கரின் தயார் மனு மீது தமிழக அரசு பதில் அளிக்க வேண்டுமென கூறி இவ்வழக்கின் விசாரணையை வரும் 18 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
SinojKiyan