சர்தார் -2 பட ஷூட்டிங்கின் போது ஸ்டண்ட் கலைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்திற்கு படக்குழு இரங்கல் தெரிவித்துள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் வெளியான படம் சர்தார். இப்படத்தில் கார்த்தி 2 வேடங்கள் நடித்திருந்தார். கார்த்தியுடன் இப்படத்தில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயக்ன், லைலா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இப்படம் வெளியாகி ரூ.100 கோடி வசூலித்து, ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் 2 வது பாகம் எப்போது? என ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.
இந்த நிலையில் சமீபத்தில் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கி நடந்து வருகிறது.
இந்த நிலையில் சர்தார் -2 படத்தின் ஸ்டண்ட் நடிகர் ஒருவர் கீழே விழுந்து மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, படக்குழு, “ஏழுமலையின் குடும்பத்தினருக்கு எங்கள் ஒட்டுமொத்த படக்குழுவும் ஆந்த ஆழ்ந்த இரங்கலை கூறிக் கொள்கிறோம். இத்துயரமான நேரத்தில் அவர்களுடன் நாங்கள் இருக்கிறோம்” என்று கூறியுள்ளனர்.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்ற ஷூட்டிங்கின்போது இவ்விபத்து நடந்தது குறிப்பிடத்தக்கது.
சர்தார் -2 பட ஷூட்டிங்கின் போது ஸ்டண்ட் கலைஞர் உயிரிழப்பு
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Previous Articleஅந்த திறமையை பார்த்து எனக்கு வாய்ப்புகள் வரணும் -ஐஸ்வர்யா ராஜேஷ்
Next Article அஜித் பவாருக்கு சிக்கல்…4 முக்கிய தலைவர்கள் விலகல்
Keep Reading
Add A Comment