கவர்ச்சியாக நடிக்க நிறைய அழைப்புகள் வந்தன என்று நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் அட்டகத்தி, ரம்பி, காக்கா முட்டை, தர்மதுரை, வட சென்னை, கனா, நம்ம வீட்டுப் பிள்ளை, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் டியர். இப்படம் கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியானது.
தற்போது கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாருக்கு ஜோடியாக உத்தரகாண்டா படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார். இப்படத்தை ரோஹித் இயக்குகிறார். இப்படம் மூலம் கன்னடத்தில் ஐஸ்வர்யா ராஜேஸ் அறிமுகம் ஆகிறார்.
இந்த நிலையில், தனக்கு கவர்ச்சியாக நடிக்க அழைப்பு வந்தது என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
கவர்ச்சியாக நடிக்க எனக்கு அழைப்புகள் வந்தன. ஆனால் நான் அதை தேர்ந்தெடுக்கவில்லை. எனக்குப் பொருத்தமான கேரக்டர்களில் நடிக்க விரும்பிறேன் என்றும், அது தனக்குப் பொருத்தமானது இல்லை.அது எனக்குத் தேவையா என சந்தேகங்களை எழுப்பும் ஒன்றை நான் செய்ய விரும்பவில்லை. எனது திரைப்படங்களை சமூகப் பொறுப்புடன் பார்க்க இருக்க வேண்டும். குடும்பங்களை மகிழ்விக்க வேண்டும்..என் நடிப்புத் திறமையை பார்த்து எனக்கு வாய்ப்புகள் வர வேண்டும் என கூறியுள்ளர்.
அந்த திறமையை பார்த்து எனக்கு வாய்ப்புகள் வரணும் -ஐஸ்வர்யா ராஜேஷ்
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Previous Articleஅமரன் படம் வரும் தீபாளிக்கு ரிலீஸ்
Keep Reading
Add A Comment