நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அமரன் படம் வரும் தீபாளிக்கு வெளியாகவுள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர் நேசனல் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் அமரன். சோனி பிக்சர்ஸ் இப்படத்தை இணைந்து தயாரிக்கிறது.
இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து சாய்பல்லவி நடித்துள்ளார். பெரியசாமி இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் ராணுவ வீரராக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் இப்படத்தின் டிஜிட்டர் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ.55 கோடிக்கு கைப்பற்றியுள்ளது.
இப்படத்திற்கு எதிர்பார்ப்பு குவிந்து வரும் நிலையில் வரும் தீபாவளியை முன்னிட்டு வரும் அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு இப்படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.
அமரன் படம் வரும் தீபாளிக்கு ரிலீஸ்
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Keep Reading
Add A Comment