ஓமன் நாட்டில் ராஸ் மத்ரகா என்ற பகுதியில் தென்கிழகே 25 மைல்கள் தொலைவில் எண்ணெய் கப்பல் ஒன்று கவிழ்ந்து பெரும் விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓமன் நாட்டின் கடலோரப் பகுதியில் துகம் என்ற துறைமுகம் உள்ளது. இங்கு அந்த நாட்டின் எண்ணெய் மற்றும் எரிபொருள் தொழில்கள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் இந்த நகருக்கு அருகே, மத்ரகா என்ற பகுதியில் இருந்து தென்கிழக்கே 25 கடல் மைல்கள் தொலைவில் எண்ணெய் கப்பல் ஒன்று திடீரென்று கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.இந்தக் கப்பல் 117 மீட்டர் நீளத்துடன் எண்ணெய் பொருட்கள் ஏற்றிக் செல்லும் வகையில் கடந்த 2007 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது ஆகும்.
இதுகுறித்து, ஓமன் நாட்டு கடல்வழி பாதுகாப்பு மையம் கூறியதாவது: இக்கப்பலில் 13 இந்தியர்கள், 3 இலங்கையைச் சேர்ந்தவர்கள் என மொத்தம் 16 பேர் பயணித்துள்ளனர்.
இக்கப்பல் ஏமன் நாட்டின் துறைமுக நகரான ஏடன் நோக்கி சென்று கொண்டிருந்தபோது, கப்பல் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது., இதில் காணாமல் போனவர்களை தேடும் பணிகள் நடந்து வருகிறது.
SinojKiyan