தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் கமல்ஹாசன். இவர் ஷங்கர் இயக்கத்தில் நடித்துள்ள படம் இந்தியன் -2. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லைகா தயாரித்துள்ளது.
இப்படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து, சித்தார்த், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகி, கடந்த 12 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ரிலீஸானது.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் பெற்ற நிலையில், இப்படத்தின் நீளம் அதிகம் என விமர்சனம் எழுந்தது.
இந்த நிலையில், இப்படத்தின் 12 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் நீளம் விமர்சனத்திற்குள்ளான நிலையில், 12 நிமிடங்கள் குறைக்கப்பட்டுள்ளது. இப்புதிய பதிப்பு இன்று மேட்னி ஷோ முதல் அனைத்து தியேட்டர்களிலும் திரையிடப்பட்டுள்ளது.
ஷங்கர் படத்தில் இப்படி நடப்பது இதுவே முதல்முறை எனவும், ஷங்கர் எப்படி இதற்கு ஒப்புக்கொண்டார் என கேள்வி எழுந்துள்ளது.
ஆனால், ரசிகர்களின் திருப்திக்காக இப்படி முன்னணி இயக்குனர் சமரசம் செய்துகொள்வதில் தவறில்லை என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.