பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.ஆர்ம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5 ஆம் தேதி ரவுடிகளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக சிலரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், வரும் 20 ஆம் தேதி நீலம் பண்பாட்டு பையம் சார்பில் ஆர்ம்ஸ்ராங்கின் கொலைக்கு நீதிவேண்டி நினைவேந்தல் பேரணி நடத்தவுள்ளதாக நீலம் பண்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பா.ரஞ்சித் தன் எக்ஸ் தள பக்கத்தில், ’’பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணன் கே.ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களின் படுகொலைக்கு நீதி வேண்டி வரும் சனிக்கிழமை 20 ஆம் தேதி மதியம் 3 மணி அளவில் சென்னை எழும்பூரில் நினைவேந்தல் பேரணி. அனைத்து தலித் கூட்டமைப்பின் தலைவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், பல்வேறு சங்கங்கள் மற்றும் கலைஞர்கள் கலந்துகொள்ளும் எழுச்சிமிகு பேரணியில் ஆயிரமாயிரமாய் அணிதிரள்வோம், வாருங்கள். ஜெய் பீம்!’’என்று தெரிவித்துள்ளார்.