தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இப்புதிய கட்டண உயர்வு ஜூலை 1 ஆம் தேதி முதல் கணக்கிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டுப் பயன்பாடு, கைத்தறி, கிராம பஞ்சாயத்துகளில் உள்ள குடிசைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வழிபாட்டுத்தலங்கள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஐடி நிறுவங்கள் ஆகியவற்றிற்கான மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி, வீட்டுகளுக்கான கட்டண உயர்வு குறித்து தமிழ் நாடு ஒழுங்குமுறை ஆணையம் சார்பில் தெரிவித்துள்ளதாவது:
0 முதல் 400 யூனிட் பயன்பாட்டிற்கான மின் கட்டணம் ரூ.4.60 ல் இருந்து 4.80 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
401 முதல் 500 யூனிட் பயன்பாட்டிற்கான கட்டணம் ரூ.6.15ல் இருந்து ரூ.6.45 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
501 முதல் 600 யூனிட் பயன்பாட்டிற்கான கட்டணம் ரூ.8.15 ல் இருந்து ரூ.8.55 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
601 முதல் 800 யூனிட் பயன்பாட்டிற்கான கட்டணம் ரூ.9.20 ல் இருந்து ரூ.9.65ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
801 முதல் 1000 யூனிட் பயன்பாட்டிற்கான கட்டணம் ரூ.10.20 ல் இருந்து ரூ.10.70 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
1000 யூனிட்டிற்கு மேல் யூனிட் பயன்பாட்டிற்கான கட்டணம் ரூ.11.25ல் இருந்து ரூ.11.80 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான மின் கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ரூ.8.15ல் இருந்து ரூ.8.55 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ரயில்வே, ராணுவ வீரர்களுக்கான குடியிருப்புகளுக்காக மின் கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ரூ.8.15 காசுகள் இருந்து ரூ.8.55 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
50 யூனிட்டிற்கு மேல் வணிகப் பயன்பாட்டிற்கான மின்கட்டணம் ஒரு யூனிட் ரூ.9.70 ல் இருந்து ரூ.10.15 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.