இந்தியாவின் பிரபல ஸ்டேஷனரி பிராண்டான கேம்லின் நிறுவனத்தின் நிறுவனரும் தலைவருமான சுபாஷ் தண்டேகர் காலமானார்.
இந்திய ஸ்டேஷனரி உற்பத்தியில் பிரத்யேக இடம் பிடித்து முன்னணியில் உள்ளது கேம்லின். இந்த நிறுவனத்திற்கு மக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல மதிப்பு இருந்து வருகிறது. இதற்குக் காரணம் இந்த நிறுவனத்தின் நிறுவனரும், தலைவருமான சுபாஷ் தண்டேகர்.
கேம்லின் நிறுவனம் மும்பையைத் தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் நிலையில், ஜப்பான் நாட்டின் கோகுயோ எனும் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறது. அதன்படி, கடந்த 2001 ஆம் ஆண்டு கோகுயோ நிறுவனம், ரூ.366 கோடிக்கு கேம்லின் நிறுவனத்தின் 51 பங்குகளை வாங்கியது.
கடந்த 1931 ஆம் ஆண்டு டி.பி. தண்டேகர் அவரது சகோதரர் ஜி.பி. தண்டேகர் இணைந்து கேம்லின் என்ற நிறுவனத்தை துவக்கினர்.
கடந்த 1946 ஆம் ஆண்டு இது தனியார் நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டு, 1998 ஆம் ஆண்டு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு, பொதுத்துறை நிறுவனமாக மாறியது.
இந்த நிலையில் கேம்லின் நிறுவனத்தின் நிறுவனர் சுபாஷ் தண்டேகர் கடந்த திங்கட்கிழமை அன்று காலமார். சில நாட்களாக உடல் நலக்குறைவால் பதிக்கப்பட்டு, மும்பையில் உள்ள இந்துஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெறு வந்த நிலையில் காலமானதாக அறிவிக்கப்பட்டது.
இவரது இறுதிச் சடங்கில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நிறுவனத்தின் ஊழியர்கள் மட்டும் பங்கேற்றதாக தகவல் வெளியாகிறது.
சுபாஷ் தண்டேகரின் மறைவுக்கு மகாராஷ்டிர துணைமுதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கல் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சினோஜ்கியான்