சென்னையில் 16 வயது சிறுவனை 30 வயது பெண் ஒருவர் திருமணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலமாகவே தகாத உறவு, கள்ளக் காதல் உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் வயது 30. இவர். அதேபகுதியில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை செய்து வந்தார்.
அந்தக் கடையில் 15 வயதான சிறுவன் ஒருவனும் வேலைக்குச் சேர்ந்து பணி செய்து வந்தான். சிறுவனின் குடும்பத்தில் வறுமை என்பதால் படிப்பை பாதியில் விட்டுவிட்டு வேலைக்கு வந்ததாக கூறப்படுகிறது.
அப்போது, ஒரே கடையில் பணியாற்றும் ஊழியர்கள் என்பதால் அப்பெண்ணுக்கும், சிறுவனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அதன்பின்னர், இருவரும் நெருங்கிப் பழகிய நிலையில் இருவரும் காதலிக்க தொடங்கினர். இவர்கள் இருவரின் பழக்கம் ஊழியர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில், சிறுவனின் பெற்றோரிடம் கூறியுள்ளனர்.
இதுகுறித்து சிறுவனின் பெற்றோர் விசாரிக்கையில் அப்பெண்ணை அக்கா என்று கூறினார். ஆனாலும் நடத்தையில் சந்தேகம் இருந்தால் சிறுவனை கண்காணிக்கத் தொடங்கினர்.
இந்த விவகாரம் எல்லோருக்கும் தெரிந்த நிலையில், இளம்பெண் , சிறுவனுடன் வெளியூர் செல்வதற்காக கிளாம்பாக்கம் வந்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சிறுவனின் பெற்றோர், கிளாம்பாக்கம் வந்து, மகனை மீட்டனர். சிறுவனின் பெற்றோரை பார்த்ததும் அப்பெண் அங்கிருந்து ஓடிவிட்டார்.
இந்த நிலையில், சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.