ரூ.100 கோடி நில அபகரிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கேரளாவில் பதுங்கியிருந்த விஜயபாஸ்கரை தனிப்படை போஸ்லீஸார் வளைத்து கைது செய்தனர்.
கரூர் மாவட்டம் மண்மங்கலம் தாலூக்கா குப்பிச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவருக்கு சொந்தமான ரூ.100கோடி மதிப்பிலான நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போஒலியாக பத்திரப் பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இப்புகாரின் அடிப்படையில் கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
எனவே விஜயபாஸ்கர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவரது ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது..
விஜயபாஸ்கரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவர் தலைமறைவாக இருந்து வந்தார்.
இதையடுத்து, கரூ நீதிமன்றத்தில் விஜயபாஸ்கர் முன் ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தார். கடந்த 2 ஆம் தேதி முதன்மை நீதிமன்றம் உத்தரவை தள்ளிவைத்தது.
இந்த நிலையில் கடந்த 5 ஆம் தேதி அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர் வீடுகளில், அலுவலகங்களில் சிபிசிஐடி போலீஸார் சோதனை நடத்தினர்.
கடந்த 6 ஆம் தேதி எம்.ஆர்.விஜயப்காஸரின் முன் ஜாமின் மனுவை விச்சாரித்த கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றம் அவரது ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அவரது சகோதருக்கும் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த நில மோசடி விவகாரத்தில் 14 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சிபிசிஐடி போலீஸார் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை தேடி வந்த நிலையில், கேரளாவில் தலைமறையாகி இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கரை இன்று காலையில் போலீஸர் கைது செய்யப்பட்டுள்ளார்.
SinojKiyan