தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார்.
இக்கட்சிக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட நிலையில் உறுப்பினர்கள் இக்கட்சியில் இணைக்கப்பட்டு வருகின்றனர்.
வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காக விஜய் செயல்பட்டு வரும் நிலையில், சமீபத்தில் இக்கட்சி சார்பில் கல்வி விழா நடத்தப்படது.
இதில் விஜய் கலந்து கொண்டு பேசினார். விரைவில் த.வெ.க. மா நில மா நாடு நடத்தப்படும் என்று கூறப்பட்டது.
அதன்படி, ஒரு மாநில மாநாடு, 4 மண்டல மா நாடு,10 மாவட்ட பொதுக்கூட்டங்கள் நடத்த விஜய் திட்டமிட்டுள்ளதாகவும், முதல் மா நாட்டை திருச்சியில் நடத்த விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் எனவே முதல் மா நாட்டை வரும் செப்டம்பர் அல்லது நவம்பரில் நடத்தலாம் எனவும், மக்களவை சந்திக்கும் வகையில் 100 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.
மேலும், தேர்தல் ஆணையத்தில் கட்சிப் பெயர் பதிவேற்றம் செய்த அடுத்த நாளே கட்சிக் கொடியை அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளதாக தகவல்.