இயக்குனரும் நடிகருமான ராதாகிருஷ்ணன் பார்த்திபன் நடித்து இயக்கியுள்ள படம் டீன்ஸ். இப்படத்தில் பார்த்திபன், யோகிபாபு, கிரித்திகா பாலசுப்பிரமணியம், விஸ்ருதா, டி. அம்ருதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இமான் இசையமைத்துள்ளார்.
இப்படம் ஷங்கரின் இந்தியன் -2 படத்திற்கு போட்டியாக தியேட்டரில் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதுகுறித்து பார்த்திபன் தன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
‘’Thanks friends
For your unlimited love&support
நான் சற்றே உணர்ச்சி வசப்பட்டவன்தான்!
என் கண்ணீர் மழைத்துளிப் போலத் தூய்மையானது!
நேற்று TEENZ திரையரங்குகளில் அலைமோதிய அன்பு கண்களை கடலாக்கியது.வெளியான முதல் நாள் கூட்டமேமேயில்லை,மறுநாள்
டிக்கட்டே இல்லை.
எத்தனை screens? எவ்வளவு collections ?
இன்று வரை நான் பார்க்கவேயில்லை. பார்க்கவும் போவதில்லை.போதும் இந்த ஆனந்தக் கண்ணீர்.
கோடிகளை(2) என் கைகளில் கட்டிவிட்டாலும் நான் ஆனந்தத் தாண்டவம் ஆடப் போவது இல்லை.
பணத்தை மீறி படைப்பிற்கான அங்கீகாரம் என்னைப் பரவசப்படுத்துகிறது.
தொடரும் ஒத்துழைப்புக்கு நன்றி’’என்று தெரிவித்துள்ளார்.