தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் சூர்யா. இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.
தேவிஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் காட்சிகள் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தது. இப்படம் 10 மொழிகளில் வெளியாகவுள்லதாக கூறப்பட்ட நிலையில், சமீபத்தில் பாடலாசிரியர் விவேகா இப்படத்தை பார்த்து வியந்து தன் சமூக வலைதளத்தில் எழுதியிருந்தார்.
இப்படம் வரும் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில், சூர்யா தனது 49 வது பிறந்த நாளை ஜூலை 23 ஆம் தேதி கொண்டாடுகிறார்.
கடந்தாண்டு ஒவ்வொரு ஆண்டும் ரத்த தானம் செய்வேன் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்ட நிலையில், கொடுத்த வாக்கை காப்பாற்றும் வகையில் சூர்யா இன்று ரத்த தானம் செய்தார்.