திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்த 30 வயதான பேக்கரி உரிமையாளர் ஒருவருக்கு வீட்டினர் பெண் பார்த்து வந்தனர். பெண் கிடைக்காத நிலையில் இணையதள செயலி மூலம் பேக்கரி உரிமையாளர் வரன் தேடி வந்தார்.
அப்போது கொடுமுடியைச் சேர்ந்த சத்ட்யா(30) என்ற பெண் அறிமுகமானார். இருவரும் தங்கள் பயோடேட்டாவை பறிமாறிக் கொண்டனர். அதன்பின்னர், இருவரும் தினமும் செல்போனில் பேசி வந்த நிலையில் திருமணம் வரை வந்துவிட்டனர்.
இந்த நிலையில் தனது தாயாருக்கு உடல் நிலை சரியில்லை, இருப்பினும் தனக்கு மாப்பிள்ளை பார்த்து வருவதாக கூறியுள்ளார்.
அதன்பின்னர், இருவரும் மாலை மாற்றித் திருமணம் செய்து கொண்டனர். பேக்கரி உரிமையாளரின் வீட்டார் மணப்பெண்னுக்கு நகைகளை அணிய வைத்து அழகு பார்த்தனர்.
சில நாட்கள் இருவரும் குடும்பம் நடத்திய நிலையில், சத்யாவின் நடவடிக்கையில் பேக்கரி உரிமையாளர் சந்தேகம் அடைந்தார். இதுகுறித்து சத்யாவின் அவர் கேட்ட போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது,தன் புது கணவரை சத்யா மிரட்டியுள்ளார். இந்த நிலையில் சத்யாவுக்கு ஏற்கனவே திருமணமாகி, ஒரு குழந்தை இருக்கும் தகவல் தெரியவந்தது. இதனால் பேக்கரி உரிமையாளர் அதிர்ச்சியடைந்து, தனது புது மனைவி சத்யாவை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து அவர் மீது புகார் அளித்தார்.
இதுகுறித்து, போலீஸார் சத்யாவிடம் விசாரித்தனர். அப்போது, சத்யாவுக்கு புரோக்கார செயல்பட்டு வந்த கரூர் மாவட்ட தாந்தோன்றி மலையைச் சேர்ந்த தமிழ்ச் செல்வி என்பவர் செயல்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து, இருவரும் தலைமறையாகினர்.
இதையடுத்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீஸார் சத்யாவையும், கல்யாண புரோக்கர் தமிழ் செல்வியை தேடி வந்தனர். அவர்கள் இருவரும் புதுச்சேரியில் இருப்பது தெரியவந்தது.
அங்கு சென்ற போலீஸார் தோழியின் வீட்டின் பதுங்கியிருந்த சத்யாவை பிடித்து தாராபுரம் அழைத்து வந்து விசாரித்தனர்.
அதில், 10 ஆண்டுகளுக்கு முன்பே சென்னையைச் சேர்ந்த அருண் என்பவரி காதலித்து திருமணம் செய்து ஏமாற்றியுள்ளார். அவருடன் சில நாட்கள் குடும்பம் நடத்திவிட்டு, கரூரைச் சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திக்கை காதலித்து கரம் பிடித்தார்.
அதன்பின்னர், கொடுமுடி – சாலைப்புதூர் பகுதியைச் சேர்ந்த மாட்டு வியாபாரி ராஜமாணிக்கத்தின் மகன் பிரகாஷை ஏமாற்றி பணம் பெற்றுள்ளார். 2012 ஆம் ஆண்டு ராஜேஷை திருமணம் செய்து இருவருக்கும் ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் தாராபுரம் பேக்கரி உரிமையாளருடன் பழகிய நிலையில் அவரை திருமணம் செய்து சில நாட்கள் ஆன நிலையில் அங்கிருந்து ஓடியுள்ளார்.
இந்த நிலையில் பலரை ஏமாற்றி திருமணம் செய்து சில நாட்கள் குடும்பம் நடத்தி விட்டு ஓடிப் போன கல்யாண ராணி சத்யா மீது ஏற்கனவே கொலை முயற்சி, ஏமாற்றி பணம் பறித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்தனர்.
அதன்பின்னர், அவரை பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தற்போது புரோக்கர் தமிழ்ச்செல்வியை போலீஸார் தேடி வருகின்றனர். இவரை கைது செய்தால்தான் இன்னும் எத்தனை பேருக்கு சத்யாவை திருமணம் செய்து வைத்தார் என்ற விவரம் தெரியவரும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
சத்யா 50க்கும் மேற்பட்ட ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றியுள்ளதாக மீம்ஸ்கள் வைரலாகி வருகிறது.