இன்ஸ்டா பிரபலம் தனது பாலோயர்களை அடிமைகளாக வைத்திருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டைட்டானிக் நடிகர் லியானார்டோ டிகார்ப்ரியோவுடன் டேட்டிங் செய்வதாக பேசப்பட்டவர் பிரேசில் நாட்டைச் சேர்ந்த முன்னாள் மாடல் அழகியும் இன்ஸ்டா பிரபலமுமான கேட் டோரஸ்.
இவர் தனது சமூக வலைதள பக்கங்களின் மூலம் உடற்பயிற்சி, ஆரோக்கியம், தியானம் உள்ளிட்டவைகள் பற்றி பாலோயர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி வந்துள்ளார்.
இவர் போதைப் பழக்கத்திற்கு அடிமையானதாகவும் கூறப்பட்டுகிஉறட்கிறது.
இந்த நிலையில் இவரை ஃபாலோ செய்த 2 பெண்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு காணாமல் போயினர்.
இதுகுறித்து எஃப்.பி.ஐ(FBI) தீவிர விசாரணை மேற்கொண்டபோது கேட் டோர்ஸ் காணாமல் போன 2 பெண்களை அடிமையாக்கி வைத்திருந்தது கண்டுபிடிகப்பட்டது.
இதையடுத்து, கேட் டோரஸ் கைது செய்யப்பட்டார்.
இவர் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவருக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும், இரண்டு பெண்களை அவர் வீட்டில் வளர்க்கும் விலங்குகளை கவனிக்கவும், சமைக்கவும், துணிகளை துவைக்கவும், வீட்டை சுத்தம் செய்யவும் பயன்படுத்தியதுடன் ஊதியம் கொடுக்க மறூத்துள்ளதாகவும், அவர்கள் இருவரும் பேசிக் கொள்ள மறுத்ததாகவும் குற்றம்சாட்டுள்ளது.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.