உலகில் பல்வேறு சமூக வலைதளங்கள் இருந்தாலும் அதில், யூடியூப் என்ற சமூக வலைதளம் கடந்த 2021 ஆம் ஆண்டு குறிப்பாக கொரோனா காலக்கட்டத்தில் நல்ல வளர்ச்சியடைந்தது.
உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் யூடியூப் சேனல் நடத்திவருகின்றனர். தினமும் 100 கோடி மணி நேரத்திற்கு வீடியோக்களை மக்கள் கண்டுகளிப்பதாக யூடியூப் நிறுவனம் கூறியது.
இந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜிம்மி டொனால்ட்சன் என் தனது 13 வயதில் தொடங்கிய மிஸ்டர் பீஸ்ட் என்ற யூடியூப் சேனல் உலகம் முழுவதும் பார்வையாளர்களின் கவனத்தைப் பெற்றது.
இவர் வித்தியாசமான வீடியோக்கள், சாகச விடியோக்களை வெளியிட்டு அதன் மூலம் பார்வையாளர்களை கவர்ந்து வரும் நிலையில் 30 கோடி சந்தாதாரர்களை கொண்ட முதல் யூடியூபர் என்ற சாதனையை படைத்துள்ளார். மிஸ்டர் பீஸ்ட் சேனலின் நிறுவனம் ஜிம்மி டொனால்ட்சன்.
இவர் வெறும் 807 வீடியோக்கள் மட்டுமே பதிவிட்டிருந்தாலும் அவரி பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.