விருத்தாச்சலம் அருகே பரவலூர் -கோமங்கலம் இடையே பைக்கில் சென்ற இரு இளைஞர்கள், லாரி மோதியதில் உயிரிழந்தனர். இந்த விபத்தை வேடிக்கை பார்க்கக் குவிந்த கூட்டத்தின் மீது கார் மோதியதில் 17பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.,
விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுனரங்கிருந்து தப்பி ஓடினார். கார் ஓட்டுனரை பிடித்த அங்கிருந்த பொதுமக்கள் சரமாரியாக தாக்கினார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போலீஸார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இவ்விபத்தை வேடிக்கை பார்க்க குவிந்த கூட்டத்தின் மிது கார் மோதியதில் 17 பேர் காயமடைந்த நிலையில் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.