இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி கடந்த 2023 ஆம் ஆண்டு இளைஞர்கள் வாரத்தில் 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று கருத்து கூறியிருந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓலா தலைமை நிர்வாக இயக்குனர் பகிஷ் அகர்வால், இன்போசிச் நாராயா மூர்த்தியின் கருத்தை ஆதரிப்பதாக கூறியிருந்தார்.
இதற்கு இணையதளத்தில் கடும் கண்டனம் குவிந்து வருகிறது.
ஒருவாரத்தில் 55 மணி நேரத்திற்கும் மேல் வேலை செய்பவர்கள் உடல் எடை, அதிகரிப்பு, நீரிழிவு நோய், பக்கவாதம், இதய நோய்கள் மன அழுத்தம் உள்ளிட்டவற்றிற்கு ஆளாக நேரிடும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
அதேபோல் பிரபல மருத்துவர்கள் நீண்ட நேரம் வேலை செய்வது பல தீவிர நோய்களின் அபாயத்துடன் தொடர்புடையது இதனால் அகால மரணம் ஏற்படுகிறது என்று எச்சரித்துள்ளனர்.
இந்த நிலையில், வாரம்70 மணி நேர வேலைக்கு ஓலா சி.இ.ஓவுக்கு கண்டனம் குவிந்து வருகிறது.