தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன். இவர் 3, மெரினா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், காக்கிச்சட்டை,ர் அஜினி முருகன், மாவீரன், உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான அயலான் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சங்கள் பெற்றது.
இந்த நிலையில், கனா , வாழ் உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார். தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சிவகார்த்திகேயன்- ஆர்த்தி தம்பதிக்கு ஆராதனா, மகள் குகன் தாஸ் என இரு குழந்தைகள் இருந்த நிலையில், சமீபத்தில் அவருக்கு 3 வதாக ஆண் குழந்தை பிறந்தது.
கடந்த ஜூன் 2 ஆம் தேதி தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாகவும் ஆர்த்தியும், குழந்தையும் நலம் என்று அவர் தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.