பிரபாஸ், கமல், அமிதாப் உள்ளிட்டோர் நடிப்பில் சமீபத்தில்வெளியான கல்கி ஏடி படம் ரூ.1000 கோடி வசூலித்துள்ளது.
தெலுங்கு சினிமா நாளுக்கு நாள் புதிய உயரங்களையும் சாதனைகளையும் படைத்துக் கொண்டே போகிறது.
அந்த வகையில் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள படம் ’கல்வி 28928 ஏடி’. இப்படத்தி அவ்ருடன் இணைந்து கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி,அன்னா பென் உட்பட பலர் நடித்துள்ளனர்.
சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். வைஜெயந்தி மூவிஸ் பிரமாண்டமாக இப்படத்தை தயாரித்துள்ளது.
பான் இந்தியா படமாக இப்படம் கடந்த ஜூன் 27 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.
அறிவியல் – புராணம் கலவையில் உருவான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ரூ.600 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் முதல் நாளில் ரூ.191 கோடி அளவுக்கு வசூல் குவித்து சாதனை படைத்தது. அடுத்து 2 வது நாளில் ரூ.295.5 கோடி வரை வசூலித்தது.
இப்படம் வெளியாகி 17 நாள்கள் ஆகும் நிலையில் உலகளவில் இப்படம் ரூ. 1000 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், இப்படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.