திமுக வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்க வெற்றியாக விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றியும் அமைந்துள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது:
நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சி அமைப்பதற்கு பெரும்பான்மை பெறாத கட்சிதான் பாஜக. இறங்கி வந்து சில கட்சிகளின் தயவால் ஒன்றியத்த்ல் ஆட்சி அமைத்துள்ளது பாஜக. அத்தகைய தோல்வி முகமே பாஜகவுக்கு இடைத்தேர்தலிலும் தொடர்கிறது. தோல்விகள் இருந்து பாஜக பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். .
மாநில உணர்வுகளை மதிக்காமல், ஆட்சியையும் கட்சியையும் நடத்த முடியாது என்பதை பாஜக இனியாவது உணர வேண்டும். மக்களோடு இருக்கிறோம்!~மக்கள் எங்களோடு இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
தமிழ் நாட்டில் 2019 முதல் இந்தியா கூட்டணியின் வெற்றி தொடர்கிறது. நாள்தோறும் நல்ல பல திட்டங்கள் என சாசதனைகள் செய்து வரும் திமுக அரசின் சாதனைகளுக்கு மகுடம் சூட்டுவதாக சாதனை வெற்றியாக இது அமைந்துள்ளது.
நேரம், காலம் பார்க்காமல் உழைத்த உழைப்புக்கும் தினந்தோறும் உருவாக்கிக் கொடுத்த திட்டங்களுக்கும் மக்கள் தெரிவித்த நன்றியின் அடியாளமே இந்த வெற்றி என்று தெரிவித்துள்ளார்.