கமல்ஹாசனின் இந்தியன் -2 படம் நேற்று உலகம் முழுவதும் ரிலீஸான நிலையில், உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலும் வசூல் உள்ளிட்டவற்றைச் சேர்ந்த மொத்தம் ரூ.50 கோடி மட்டும் வசூல் என தெரிகிறது.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் நேற்று உலகம் முழுக்க ரிலீஸான படம் இந்தியன் -2. இப்படத்தில் கமலுடன் இணைந்து சித்தார்த், பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருந்தார். ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவணகுமார் வசனம் எழுதியிருந்தனர்.
இப்படத்தை லைகா பிரமாண்ட தயாரித்த நிலையில் நேற்று இந்தியன் 2 படம் ரிலீஸானது. இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனம் பெற்று வருகிறது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்தியன் 2 படம் முதல் நாளில் ரூ. 50 கோடி மட்டுமே வசூல் குவித்துள்ளதாக தகவல் வெளியாகிறது.
குறிப்பாக தமிழ் நாட்டில் அதிக தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டும் வெறும் ரூ.17 கோடி மட்டுமே வசூல் குவித்ததாக கூறப்படுகிறது. வெளி நாடுகளிலும் வசூல் உள்ளிட்டவற்றைச் சேர்ந்த மொத்தம் ரூ.50 கோடி மட்டும் வசூல் என தெரிகிறது.
ஷங்கர்- கமல் கூட்டணியில் உருவாகியுள்ள இந்தியன் 2 படம் முதல் நாள் வசூல் ரூ.100 கோடியை நெருங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதிரிபார்ப்பிற்கு மாறாக முதல் நாளில் ரூ. 50 கோடி மட்டுமே வசூலை குவித்துள்ளதாக தகவல் வெளியாகிறது.