தமிழகத்தில் விக்கிரவாண்டி தொகுதி உள்ளிட்ட இந்தியா முழுவதும் உள்ள 7 மாநிலங்களில் உள்ள 13 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.
இதற்கான வாக்கு எண்ணும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. 13 தொகுதிகளில் 11 சட்டமன்றத் தொகுதிகளில் இந்தியா கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.
மேற்குவங்கத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 4 தொகுதிகளில் இந்தியா கூட்டணியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது.
இமாச்சல பிரதேசத்தில் 3 தொகுதிகளிலும், உத்தரகாண்டில் 2 தொகுதிகளிலும் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.
பஞ்சாப்பில் ஜலந்தர் தொகுதியில் ஆம் ஆத்மி முன்னிலையில் உள்ளது. 7 மாநில இடைத்தேர்தலிலும் பாஜக கூட்டணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அந்தியூர் சிவா 44,8690 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். பாமக வேட்பாளர் சி.அன்புஅணி 17,458 வாக்குகள் பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கா. அபிநயா 3,095 வாக்குகள் பெற்று பின்னடைவில் உள்ளார்.
இத்தேர்தலில் அதிமுக போட்டியிடாமல் விலகியது குறிப்பிடத்தக்கது.