நலிந்த நடிகர்களுக்காக நிதியுதவி வழங்கியுள்ளார் யோகிபாபு.
தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகர் யோகிபாபு. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளுசபா நிகழ்ச்சியில்மூலம் நடிப்பு பயணத்தை தொடங்கினார்.
அதன்பின்னர் யோகி என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். இப்படத்தை அடுத்து, அரண்மனை, கோலமாவு கோகிலா, பரியேறும் பெருமாள், ஆண்டவன் கட்டளை உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானார்.
தற்போது முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் யோகிபாபு, தர்மபிரபு, காக்டெய்ல், பன்னி குட்டி, கூர்க்கா என பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
இந்த நிலையில், தென்னிந்திய நடிகர் சங்க துணைத்தலைவரும் நடிகர் சங்க அறக்கட்டளையின் உறுப்பினருமான பூச்சி முருகனிடம் ரூ. 6 லட்சத்திற்கான காசோலையை வழங்கியுள்ளார். இவருக்கு ரசிக்ர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
தற்போது கெனத்தை காணோம் என்ற படத்தில் அவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
நலிந்த நடிகர்களுக்காக நிதியுதவி வழங்கிய யோகிபாபு
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Keep Reading
Add A Comment