மதுபானக் கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட் சிறையில் உள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்லூக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து, ஊழல் குற்றச்சாட்டில் கைதான அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜகவினர் வலியுறுத்தி, போராட்டமும் நடத்தினர்.
இந்த நிலையில் சிறையில் இருந்தே மக்களுக்காக பணியாற்றுவேன் என்று அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்து, முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவில்லை.
இவ்வழக்கில் அமலாக்கத்துறை தன்னை கைது செய்ததை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இம்மனு மீதான விசாரணை முடிந்த நிலையில் இன்று அவருக்கு நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது.
இவ்வழக்கு விசாரணையின் போது அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் பதவி பற்றி பற்றி உச்ச நீதிமன்றம் கூறியுள்ளதாவதுள்
தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை பதவி விலகும்படி நீதிமன்ற அறிவுறுத்த முடியுமா அல்லது முதல்வராகவோ, அமைச்சராகவோ செயல்படக்கூடாது என உத்தரவிட முடியுமா? என்ற எங்களுக்குச் சந்தேகம் உள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் மற்றும் டெல்லி மா நில முதல்வர். அவர் வகிப்பது முக்கியத்துவமும், செல்வாக்கும் கொண்ட பதவியாகும். அதனால் எந்த வழிக்காட்டுதலையும் வழங்கவில்லை. ஆனால் அந்த முடிவை அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விட்டுவிடுகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்!
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Keep Reading
Add A Comment