நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில், இயக்குநர் நித்திலம் சுவாமிநாதன் இயக்கத்தில் கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி வெளியான படம் மஹாராஜா.
இப்படம் வெற்றிப்படமாக அமைந்ததால் விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இத்திரைப்படம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் ரூ.105 கோடி வசூலை ஈட்டியுள்ளது.
இப்படம் பற்றி தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் கூறியதாவது:
மகாராஜா திரைப்படத்தை உருவாக்க முடிவு செய்தபோது, இது பார்வையாளர்களை நிச்சயம் கவரும் என்று நம்பினோம். ஆனால், எங்களை ஆச்சர்யப்படுத்தியது என்ற வென்றால் கமர்ஷியல் ரீதியாக எங்களுக்கு கிடைத்த அங்கீகாரம் தான். இப்படத்திற்கு ஆதரவளித்த பத்திரிக்கை மற்றும் ஊடகங்களுக்கு நன்றி என்று கூறினார்.