இந்தியப் பிரதமர் செல்லும் அதே நாளில் மாணவர்கள் தங்கள் பயிற்சியை துவக்குவது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், பொன்னேட்டில் பொறிக்கப் பட வேண்டிய நாள் என்று நெகிழ்ச்சியுடன் தாம்பரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது அறிவியல் மற்றும் கலாச்சாரத்துக்கான ரஷ்ய மையத்தின் சென்னைப் பிரிவு இயக்குனர் மற்றும் துணை தூதர் அலெக்ஸ்சாண்டர் டோடோநோவ் பேட்டி.
பல்கலைக்கழக மாணவர்கள் கோடைகால வேலை வாய்ப்பு பயிற்சி பெற ரஷ்யா பயணம்
பாரத் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் சார்பில் உலகளாவிய முதல் தரவரிசையில் உள்ள 500 பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அயல்நாடு சென்று பயின்று வர, வருடந்தோறும் ஏற்பாடு செய்து வருகிறது,
அதில் ஒரு பகுதியாக , ரஷ்யா நாட்டின் முதல் அதிபர் போரிஸ் எல்சின் நினைவாக, இயங்கி வரும் யூரல் பெடெரல் பல்கலைக் கழகத்துக்கு (URAL FEDERAL UNIVERSITY) இந்த ஆண்டில், நவீன தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புக்கான சம்மர் இன்டர்ன்ஷிப் திட்டப் பயிற்சி (SUMMER INTERNSHIP PROJECT TRAINING) பெற மாணவர்களை தேர்ந்தெடுத்து அனுப்புகிறது,
இது தொடர்பாக கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக அறிவியல் மற்றும் கலாச்சாரத்துக்கான ரஷ்ய மையத்தின் சென்னைப் பிரிவு இயக்குனர் மற்றும் துணை தூதர் அலெக்ஸ்சாண்டர் டோடோநோவ் கலந்து கொண்டார,
மேலும் முனைவர் ஹரிபிரகாஷ் அவர்கள் தொடர்கையில், இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளின் நல்லுறவை மேலும் வலுப்படுத்த, நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ,ரஷ்யா செல்லும் அதே நாளில், நமது மாணவர்கள் ரஷ்யா செல்வது மிகவும் பெருமைக்குரியது என்று தெரிவித்தார்,
பின்னர் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் ,அலெக்சாண்டர் டோடோநோவ் பேசுகையில்,
இந்தியப் பிரதமர் செல்லும் அதே நாளில் மாணவர்கள் தங்கள் பயிற்சியை துவக்குவது, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், பொன்னேட்டில் பொறிக்கப் பட வேண்டிய நாள் என்றும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
பல்கலைக்கழக மாணவர்கள் கோடைகால வேலை வாய்ப்பு பயிற்சி பெற ரஷ்யா பயணம்
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Next Article நான் பொய் சொல்லவில்லை- நடிகர் ரஞ்சித்
Keep Reading
Add A Comment