*சிதம்பரம் அருகே அரசு பள்ளியில் மதிய உணவில் பூரான் கிடந்த உணவை சாப்பிட்ட 50க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வயிற்று வலி மயக்கம், அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி, பெற்றோர்கள் அதிர்ச்சி, போலீசார் விசாரணை.*
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வர்கூர்பேட்டை கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் நடுநிலைப்பள்ளி உள்ளது இந்த பள்ளியில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படித்து வருகின்றனர் இந்தப் பள்ளியில் இன்று மதியம் சமைக்கப்பட்ட உணவை ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள 50க்கும் மேற்பட்ட மாணவ குழந்தைகள் சாப்பிட்டதாக கூறப்படுகிறது, இந்த மதிய உணவை சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி வயிற்றுவலி மயக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது,
இதனால் அதிர்ச்சி அடைந்த தலைமை ஆசிரியர் மற்றும் சக ஆசிரியர்கள் உணவை பார்த்தபோது உணவில் விஷ பூச்சிகளில் ஒன்றான பூரான் கிடந்ததாக தெரிகிறது, இதனை அடுத்து வாந்தி மயக்கம் வயிற்றுவலி ஏற்பட்ட மாணவ குழந்தைகள் அவசர ஊர்தி 108 மூலம் சிதம்பரம் அரசு காமராஜர் மருத்துவமனைக்கு 28 குழந்தைகளும் மற்ற குழந்தைகள் அண்ணாமலை நகரில் உள்ள அரசு மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளும் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் விஷப்பூச்சி பூரான் கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது,
மேலும் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் வரும் குழந்தைகள் அழுதவாறு வந்தது பெற்றோர்களுக்கு மேலும் கவலையை ஏற்படுத்தி உள்ளது, இருந்தாலும் கூட மருத்துவர்கள் யாருக்கும் எந்த பிரச்சனைகளும் இல்லை எனவும் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளனர்,
மேலும் அந்தப் பள்ளியில் உணவு சமைப்பாளர் மட்டுமே இருப்பதாகவும் பொறுப்பாளர் இல்லை எனவும் பொறுப்பாளர் மற்றும் உணவு சமைப்பாளர் இருந்திருந்தால் கவனக்குறைவு ஏற்படாமல் இருந்திருக்கும் எனவும் பெற்றோர்கள் சார்பில் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்,
இந்த சம்பவம் குறித்து அண்ணாமலை நகர் போலீசார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களையும் சிதம்பரம் அரசு காமராஜர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களிடையும் என்ன நடந்தது என விசாரணை நடத்தி வருகின்றனர் அரசு பள்ளி உணவில் விஷப்பூச்சி விழுந்து அந்த உணவை சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் வரகூர்பேட்டை கிராமம் மற்றும் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விஷப்பூச்சி விழுந்து அந்த உணவை சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Keep Reading
Add A Comment