தினமும் 2 கோடி சம்பளம் வாங்கும் நடிகர் ஒருவர் தனக்கு சம்பளம் வேண்டாம் என திடீரென அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் பவன் கல்யாண். இவர் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தாலும், ஜனசேனா கட்சியைத் தொடங்கி தீவிர அரசியலிலும் ஈடுபட்ட வந்த நிலையில் தொடர் தோல்விகளை சந்தித்தார்.
சமீபத்தில் நடைபெற்ற ஆந்திர சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி, ஜன சேனா கட்சி கூட்டணி அமைத்து அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றார். துணை முதல்வராக பவன் கல்யாண் பதவியேற்றார். அவரது வெற்றி அரசியலிலும், சினிமாவிலும் அதிகக் கவனம் பெற்றது.
இந்த நிலையில், சினிமாவில் நடிக்க பவன் கல்யாண் 30 முதல் 35 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுப்பதாகவும், அவருக்கு 70 கோடி ரூபாய் சம்பளம் என்று கூறப்படுகிறது. அதன்படி, தினமும் அவருக்கு சம்பளம் ரூ.2 கோடி எனத் தகவல் வெளியாகிறது.
இந்த நிலையில், ஆந்திர மாநிலச் சட்டமன்ற தேர்தலில் பவன் கல்யாண் வெற்றி பெற்ற துணைமுதல்வராக பதவி வரும் நிலையில், தலைமைச் செயலகத்தில் அவர் தனது சம்பளத்தை வாங்கச் சென்றபோது அவருக்கு ரூ.35 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டது.
ஆனால் அவர் 3 நாள் மட்டும் தலைமைச் செயலகத்திற்கு வந்துள்ளதாகவும், அதனால் சம்பளம் வேண்டாம் என கூறியதாக தகவல் வெளியாகிறது.
மேலுன், ஆந்திர மாநிலத்தின் நிதி நிலைமைப்பார்க்கும்போது எனக்கு சம்பளம் வாங்கவே மனம் வரவில்லை என்றும் இனிமேல் சம்பளம் வாங்க மாட்டேன் என்று கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தன் பதவி காலத்தில் சம்பளம் வாங்காமல் ரூ.1 மட்டும் சம்பளம் பெற்றுக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சினோஜ் கியான்
’’தினமும் ரூ.2 கோடி’’….சம்பளம் வேண்டாம் என கூறிய பவன் கல்யாண்!
By Sinojkiyan
Cinema
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Keep Reading
Add A Comment