நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வுட் கோர்ட் பகுதியில் தனிநபர் ஒருவர் துப்பாக்கியால் வளர்ப்பு பிராணிகளை சுடும் சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் குன்னூர் நகர காவல்துறையினர் விசாரணை…
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள வுட்கோட் குடியிருப்பு பகுதியில் வளர்ப்பு பிராணிகளை துப்பாக்கியால் சுடும் நபரின் சிசிடிவி பதிவு சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அது சம்பந்தமாக பல்வேறு தரப்பினர் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து வந்தது.இதுசம்மந்தமாக குன்னூர் நகர காவல்துறையினர் வுட் கோர்ட் பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர்.
இதில் அந்த துப்பாக்கி பயன்படுத்திய நபரான ஜேம்ஸிடம் விசாரணை நடத்தப்பட்டது.அதில் அவர் பயன்படுத்திய துப்பாக்கி விளையாட்டுக்கு பயன்படுத்தக்கூடிய காற்றழுத்த துப்பாக்கி(ஏர் கன்) என்பது கண்டறியப்பட்டது.உடனே அந்த துப்பாக்கியை காவல்துறையினர் பறிமுதல் செய்து,வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு உள்ளது.மேலும் இச்சம்பவம் தொடர்பாக குன்னூர் நகர காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தனிநபர் ஒருவர் துப்பாக்கியால் வளர்ப்பு பிராணிகளை சுடும் சிசிடிவி காட்சி
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Previous Articleஒரு கோடியே 65 லட்ச ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்கள் அழிப்பு.
Keep Reading
Add A Comment