ஆப்பிரிக்க நாடான கென்யாவில் புதிய வரி உயர்வை எதிர்த்து மக்கள் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் இதுவரை சுமார் 39 பேர் பலியானதாகவும், 360 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகிறது.
ஆப்பிரிக்க நாடான கென்யாவில் அதிபர் வில்லியன் ரூட்டோ தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில், கென்ய நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய நிதி மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
இந்த புதிய வரி உயர்வு அமல்படுத்தப்பட்டதற்கு எதிராக மக்கள் எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான மக்கள் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்தனர். இதைப் பார்த்த பாதுகாப்பு போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்கரர்கள், நாடாளுமன்ற கட்டிடத்திற்குத் தீ வைத்தனர். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்ற கட்டிடத்திற்குத் தீ வைக்கப்பட்டதை அடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
இந்த விவகாரம் அந்த நாட்டின் அதிபர் ரூட்டோ தலைமையிலான அரசுக்கு கடும் நெருக்கடியை தந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று போராட்டத்தில் 19 பேர் பலியானதாகவும்,இதற்கு அரசு காரணம் அல்ல இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என்று அதிபர் கூறினார்.
இந்த நிலையில், அதிபர் பதவி விலக வேண்டும் என்று சமூக வலைதளத்தில் மக்கள் கருத்துக் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் இப்போராட்டத்தில் இதுவரையானதாகவும், மேலும், 361 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக கென்யாவின் தேசிய மனித உரிமைகள் ஆணையம் உறுதி செய்துள்ளது.
இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சினோஜ் கியான்
கென்யாவில் வரி உயர்வை எதிர்த்து மக்கள் போராட்டம்! 39 பேர் பலி!
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Previous Articleஜெயம் ரவி – ஆர்த்தி ஜெயம் ரவி விவாகரத்து????
Keep Reading
Add A Comment