உத்தரப்பிரதேசம் மாநிலம் ஹத்ராஸில் சாமியார் ஒருவர் நடத்திய பிரசங்க நிகழ்ச்சியில் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டு இதில் சிக்கி 40 பேர் பலியாகி உள்ளனர்.
இவர்களில் 25 பேர் பெண்கள் ஆவர். கூட்ட நெரிசலில் சிக்கி பலர் காயமடைந்துள்ள நிலையில் அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உத்தரபிரதேசம் மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இங்குள்ள ஹத்ராஸில் புல்லெரா என்ற கிராமத்தில் போலோ பாபா என்ற சாமியார் பிரசங்கம் ஒன்றை நடத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் நூற்றுக் கணக்கான மக்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியின்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இதில், சிக்கி 25 பெண்கள் உட்பட 40 பேர் பலியானதாக தகவல் வெளியாகிறது. மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் படுகாயமடைந்துள்ளதாகவும், பலர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளாதாகவும் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உ.பி., ஹத்ராஸில் சாமியார் நடத்திய பிரசங்க கூட்டத்தில் நெரிசல்…40 பேர் பலி
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Previous Articleகென்யாவில் வரி உயர்வை எதிர்த்து மக்கள் போராட்டம்! 39 பேர் பலி!
Keep Reading
Add A Comment