தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ஜெயம் ரவி. இவர் தனது மனைவியை விவகாரத்து செய்யவுள்ளதாக பரவும் தகவல் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் ஜெயம் ரவி எடிட்டர் மோகனின் மகனாகவும், மோகன் ராஜாவின் சகோதரராகவும் அறியப்படுகிறார். கடந்த 2003 ஆம் ஆண்டு ஜெயம் என்ற பட்த்தை மோகன் ராஜா இயக்க, இதில், ஜெயம் ரவி நடிகராக அறிமுகமானார். இப்படமும் இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களும் ரசிகர்களும் வரவேற்பை பெற்றன. இப்படம் 2002 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியாகி சூப்பர்ஹிட் ஆன நிலையில் இதன் ரீமேக் தான் ஜெயம் படம்.
இதையடுத்து, 2004 ஆம் ஆண்டு எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி பட த்தில் இருவரும் இணைந்தனர். இப்படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் வாரிக் குவித்தது.
இதையடுத்து, தாஸ், மழை, இதயத் திருடன், சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், தீபாவளி ஆகிய படங்களில் நடித்து முன்னணி நடிகராக உருவானார்.
தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய், அஜித், சிம்பு, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இருந்தாலும் இதற்கிடையே நடிகர் ஜெயம் ரவியின் படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் குவித்து வந்த்து. அவருக்கான ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்த்து.
இந்த நிலையில் சினிமாவில் கவனம் செலுத்தி முன்னணி நடிகராக வலம் வந்த ஜெயம் ரவி கடந்த 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
தமிழ் சினிமாவில் சூர்யா- ஜோதிகா ஜோடி மாதிரி ரசிகர்களால் கொண்டாடப்படும் ஜோடிதான் ஜெயம் ரவி – ஆர்த்தி ஜோடி. ஆனால் சில தினங்களாக ஜெயம் ரவி- ஆர்த்தி இருவரும் விவாகரத்து பற்றிய தகவல் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயம் ரவி கடந்த 2009 ஆம் ஆண்டு தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆர்த்தியை காதலித்துத் திருமாம் செய்து கொண்டார். இருவரும் மனமொத்த தம்பதிகளாக வாழ்ந்து வரும் நிலையில் இத்தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இருவரும் மகிழ்ச்சியுடன் ரசிகர்களுக்கு வாழ்த்துகள் தெரிவிtஹ்து வரும் நிலையில், ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விவகாரத்து செய்ய இருப்பதாகவும், இருவரும் அடிக்கடி சண்டையிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அதேசமயம் ஜெயம்ரவி வேறொரு பெண்ணுடன் நெருக்கம் காட்டி வருவதாகவும் இதனால் இருவரும் பிரிய முடிவெடுத் துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.
பயில்வான் ரங்கநாதன் கூறியதாவது, ஜெயம் ரவிக்கும், ஆர்த்திக்கும் விவாகரத்து என்ற பேச்சு அடிபடுவதற்கு காரணம் மாமியார் சுஜாதா விஜயகுமார் தான் ……தயாரிப்பாளர் யார் வந்தலும் முதலில், தன் மாமியாரிடம் கதை சொல்லுங்ஜ்கள் அவர்கள் ஓகே என்றால், நான் கதை கேட்கிறேன்….என்று கூறுவாராம். இதனால் டென்சனான தயாரிப்பாளர் ஒருவர், கிளப்பிவிட்ட கதைதான் இது… இந்த வதந்தியில் துளியும் உண்மையில்லை என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் தற்போது ஆர்த்தி புதிய குழப்பத்தை உருவாக்கியுள்ளார். அதாவது தன் இன்ஸ்டாகிராமில், ஜெயம் ரவியுடனான புகைப்படங்களை நீக்கியதுடன், அவரைப் பின் தொடர்வதையும் நிறுத்தியுள்ளார். மேலும், தன் இரு மகன்களின் புகைப்படங்களையும் நிக்கியுள்ளார். இதைக் கண்ட ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஏற்கனவே சினிமா பிரபலங்கள் பலரும் தங்கள் துணையை விவாகரத்து செய்து வருவது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், ஜெயம் ரவி- ஆர்த்தி விவகாரமும் ரசிகர்களிடம் பேசு பொருளாகியுள்ளது. எனவே இருவரும் மவுனத்தை கலைப்பார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
சினோஜ் கியான்
ஜெயம் ரவி – ஆர்த்தி ஜெயம் ரவி விவாகரத்து????
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Previous Articleகர்ப்பிணி பெண்ணுக்கு வாகனத்திலேயே பிரசவம்
Keep Reading
Add A Comment