மலை கிராமத்தில் சாலையில் ஒரு மணி நேரமாக ஊர்ந்து சென்ற மலைப்பாம்பு பொதுமக்கள் அச்சம்
வேலூர்மாவட்டம் பேரணாம்பட்டு
பேரணாம்பட்டிலிருந்து 14 கி.மீ தூரத்தில் அரவட்லா மலைப் பகுதி அமைந்துள்ளது இந்த மலைப் பகுதியில் அரவட்லா , பாஸ்மார்பெண்டா, கொத்தூர் ஆகியமூன்று மலை கிராமங்கள் அமைந்துள்ளன. தினமும் நூற்றுக்கணக்கான மாணவர்கள், கூலித்தொழிலாளர்கள், பொதுமக்கள் அரவட்லா மலைப் பகுதியிலிருந்து பேரணாம்பட்டிற்கு வந்து செல்கின்றனர். நேற்று இரவு பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் , தொழிலாளர்கள் 50க்கு மேற்பட்டோர் பேரணாம்பட்டிலிருந் து அரவட்லா செல்லும் மலை பாதையில் சென்று கொண்டிருந்தனர். பாஸ்மார்பெண்டா மலை கிராமம் அருகில் சாலையில் சுமார் 12 அடி நீளமுள்ள மலைபாம்பு ஒன்று இரையை முழுங்கி விட்டு நகர முடியாமல் சென்றது இதனை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்
சுமார் 1 மணி நேரமாக மலைப்பாம்பு சாலையில் ஊர்ந்து சென்ற பின் இளைஞர்களும், பொதுமக்களும் காத்திருந்து நிம்மதியுடன் வீட்டிற்கு சென்றனர்
சாலையை வழிமறித்த 12அடி நீளம் கொண்ட மலை பாம்பு
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Previous Articleகடும் வெயிலில் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் மயக்கம்!
Keep Reading
Add A Comment