மேட்டுப்பாளையம் அருகே பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணிக்கு அவசர நிலையை உணர்ந்து 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் பிரசவம் பார்த்த 108ஊழியர்கள்
கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள மத்தம்பாளையம் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் தமிழரசன் இவரது மனைவி சௌமியா
நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வந்த சௌமியாவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது அதே சமயத்தில் மழையும் பெய்து கொண்டிருந்தது இதனை எடுத்து அவரது கணவர் தமிழரசன் உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து அது குறித்து தகவல் தெரிவித்தார்
பின்னர் அங்கு விரைந்து சென்ற 108 குழுவினர் மருத்துவ உதவியாளர் பாலமுருகன் மற்றும் பைலட் அருள் ஆகியோர் அங்கு சென்று கர்ப்பிணியை பரிசோதித்து உடனடியாக அவரை மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவர ஆம்புலன்ஸில் ஏற்றி அழைத்து வந்தனர்
வாகனம் மத்தம் பாளையத்தை தாண்டி வரும்போது சௌமியாவுக்கு கடுமையாக பிரசவலை ஏற்பட்ட நிலையில் நிலைமையை உணர்ந்து வாகனத்தை ஓரமாக நிறுத்தி சௌமியாவுக்கு பிரசவம் பார்த்தனர்
இதில் சௌமியாவுக்கு பெண் குழந்தை பிறந்தது இதனை எடுத்து தாயும் சேயும் மேல் சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டனர்
சூழ்நிலை மற்றும் அவசர நிலையை உணர்ந்து வாகனத்திலேயே பிரசவம் பார்த்த 108 ஊழியர்களை சௌமியா மற்றும் அவரது குடும்பத்தினர் நன்றி தெரிவித்து பாராட்டினர்
கர்ப்பிணி பெண்ணுக்கு வாகனத்திலேயே பிரசவம்
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Previous Articleவேலை இருந்தால்தான் குடும்பத்தை நடத்த முடியும்- குஷ்பு பேட்டி
Next Article ஜெயம் ரவி – ஆர்த்தி ஜெயம் ரவி விவாகரத்து????
Keep Reading
Add A Comment